இருபத்தைந்து சதவீதமான தயாரிப்பை ஆசிய நாடுகளில் தொடங்க திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்

கடந்த சில வாரங்களாக சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது.

இந்த கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் தொடர்ச்சியாக வீதிகளில் இறங்கி போராடினர்.

இதனால், பல இடங்களில் பொலிசாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையே, பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தனது தயாரிப்பை சீனாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

இதுலக்குறித்து ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன்கள் உற்பத்தி குறைந்து விட்டதால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது, ​​ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஐந்து சதவீதத்தை சீனாவுக்கு வெளியே உற்பத்தி செய்கிறது.

இந்நிலையில், வரும் 2025 ஆம் ஆண்டுக்குள், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்ஸ் உள்ளிட்ட மொத்த ஆப்பிள் தயாரிப்புகளில் இருபத்தைந்து சதவீதத்தை சீனாவிற்கு வெளியே பிற ஆசிய நாடுகளில் தயாரிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் ஆப்பிள் தனது ஒப்பந்த உற்பத்தியாளர்களையும் சீனாவிலிருந்து உற்பத்தியை வெளிநாட்டிற்கு நகர்த்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பதற்கான ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

-ift