விமானங்களை சுட்டு வீழ்த்தும் கவச ரயில்களை போர் களத்தில் இறக்கியுள்ள ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களாக போர் தொடுத்து வரும் நிலையில் போரில் இருதரப்பும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்த போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் பல நிபந்தனைகளை விதித்து மேலும் தாக்குதலை தீவிரப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

விமானங்களை சுட்டு வீழ்த்தும் அதிநவீன துப்பாக்கிகள்

இந்நிலையில், ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் ரஷ்ய கவச ரயிலில், விமானங்களை சுட்டு வீழ்த்தும் அதிநவீன துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

உக்ரைன் வீரர்களால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றவும், சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கவும் இந்த கவச ரயில் பயன்படுத்தப்பட உள்ளது.

ஸ்நைப்பர்கள் மற்றும் கனரக தானியங்கி துப்பாக்கிகளுடன் ஏராளமான வீரர்கள் இதில் பயணிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-tw