ஈரானில் ஆர்பாட்டக்காரர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக மனித உரிமைக் குழுக்கள் கடும் கண்டனம்

ஈரானில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக மனித உரிமைக் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மோசின் ஷெக்காரி (Mohsen Shekari) என்ற அந்த ஆர்ப்பாட்டக்காரர் சாலையை மறித்து, பாதுகாப்பு அதிகாரி ஒருவரைக் கத்தியால் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. மஹ்சா அமினி (Mahsa Amini) எனும் பெண், காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தபோது மாண்டதைத் தொடர்ந்து ஈரானில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

அதனைத் தொடர்ந்து அங்குப் பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டங்களின்போது பாதுகாப்புப் படையினரில் ஒருவரைக் கொன்றதற்காக மேலும் 5 பேருக்கு இந்த வாரம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறை கொண்டு ஈரான் ஒடுக்குவதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து விசாரிக்கவிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமை மன்றம் தெரிவித்தது.

 

-smc