பின்வாங்காத ரஷ்யா – குண்டுவீச்சில் சிதைந்த உக்ரேன் நகரம்!

ரஷ்யாவின் குண்டுவீச்சில் கிழக்கே உள்ள பாக்மூட் நகரம் சிதைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இதனை கூறியுள்ளார்.

ரஷ்யப் படையினர் சில மாதங்களாக டோன்பாஸ் (Donbas) வட்டாரத்தில் உள்ள பாக்மூட் நகரைக் கைப்பற்ற முயல்கின்றனர்.

குளிர்காலம் தொடங்கிவிட்டதால் உக்ரேனின் சில பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன.

இருப்பினும் பாக்மூட் நகரை வசப்படுத்துவதிலிருந்து ரஷ்யா பின்வாங்கவில்லை.

அந்த நகரின் நிலவரம் மிக மோசமாய் இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

உக்ரேனிய வீரர்கள் ரஷ்யப் படையினரின் தாக்குதலை முறியடித்து பெருஞ்சேதத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாக்மூட் நகரம் கைப்பற்றப்பட்டால் ஒட்டுமொத்த வியூகத்திலும் சிறிய அளவு  மாற்றங்கள் ஏற்படலாம்.

ஆனால் எப்பாடுபட்டாவது அந்த நகரைக் கைப்பற்றுவதில் ரஷ்யா உறுதியாய் இருப்பதாகச் கூறப்படுகின்றது.

 

 

 

-ift