கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்திலும் போர் தொடரும்: ரஷ்யா

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்திலும்  உக்ரேனில் போர் தொடரும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரேனிய மக்கள் பத்து மாதமாகக் கடுமையான போரைச் சந்தித்து வரும் நிலையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சில் ரஷ்யாவும் உக்ரேனும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவரை பல்லாயிரம் பேர் போரில் மாண்டுவிட்டனர். மேலும் மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.

ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி படையெடுப்பைத் தொடங்கியதுமுதல் உக்ரேனில் பல நகரங்கள் தரைமட்டமாகிவிட்டன.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கிறிஸ்துமஸ் பெருநாளை ஒட்டி ரஷ்யா அதன் படைமீட்பைத் தொடங்க வேண்டும் என்று இவ்வார ஆரம்பத்தில் கூறினார்.

ஆனால் ரஷ்யா அவ்வாறு செய்ய மறுத்துள்ளது. சில பகுதிகளில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை உக்ரேன் ஏற்றுக்கொண்ட பிறகே பேச்சுவார்த்தை நடத்தமுடியும் என்று மாஸ்கோ கூறுகிறது.

 

 

-smc