ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பெண்ணுரிமை அமைப்பிலிருந்து ஈரான் நீக்கம்

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பெண்கள் உரிமை அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களை ஈரான் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

அடுத்த நான்கு ஆண்டுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனப் பெண்கள் ஆணையத்தில் ஈரான் இருக்காது. ஐக்கிய நாட்டு நிறுவனப் பொருளியல் சமூக மன்றத்தில் 53 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொண்டன.

29 நாடுகள் ஈரானை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 8 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 16 நாடுகள் வாக்களிப்பில் பங்குபெறவில்லை. பெண்கள் ஆணையத்தில் ஈரானின் உறுப்பியம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

செம்டம்பர் 16ஆம் தேதி மாசா அமினி என்ற 22 வயது மாணவி காவல்துறைத் தடுப்புக்காவலில் இருந்தபோது மாண்டதைத் தொடர்ந்து ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

 

-smc