வீழ்ச்சியில் சியோமி நிறுவனம், அதிரடி வேலை குறைப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்

கொரோனா கட்டுப்பாடுகளால் பெருமளவு விற்பனை சரிந்ததால் ஆண்டுக்கு 11 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது எனவும், அதனால் சியோமி நிறுவனத்தில் சுமார் 15% ஊழியர்கள் வேலை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனத்தில் ஒன்று சியோமி நிறுவனம் (ரெட்மி) நவம்பர் மாதம் மூன்றாம் காலாண்டில் 9.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும், கொரோனா கட்டுப்பாடுகளால் பெருமளவு விற்பனை சரிந்ததால் ஆண்டுக்கு 11 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது எனவும் சியோமி தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சீனாவை தலைமையிடமாக கொண்ட சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மற்றும் இணைய சேவை வணிகத்தின் பல பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 35,314 பணியாளர்கள் இருந்ததாகவும், தற்போது சுமார் 32,000 பேர் தான் வேலையில் இருப்பதாகவும், சுமார் 15% ஊழியர்கள் வேலை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

-ds