சீனாவில் அதிகரித்து வரும் மரணங்களால் நெருக்கடியை எதிர்நோக்கும் மின்சுடலைகள்

சீனாவில் உள்ள மின்சுடலைகள் அதிகரிக்கும் சடலங்களின் எண்ணிக்கையைச் சமாளிக்கச் சிரமப்படுகின்றன.

சென்ற மாதம் சீன அரசாங்கம் சுமார் 3 ஆண்டுகளாகக் செயல்படுத்திய முடக்கநிலை, தனிமைப்படுத்துதல், கூட்டுப் பரிசோதனை ஆகியவற்றைத் தளர்த்த முடிவெடுத்தது.

அதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையும் மருந்தகங்களில் மருந்துப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளன.

சோங்சிங் (Chongqing) நகரில் லேசான COVID-19 அறிகுறி உள்ளவர்களை வேலைக்குச் செல்லும்படி அதிகாரிகள் இவ்வாரம் கேட்டுக்கொண்டனர்.

அங்குள்ள ஒரு மின்சுடலை, சடலங்களை வைத்திருக்க இடம் இல்லை என்று AFPஇடம் தெரிவித்தது. அண்மைய நாள்களில் அங்கு கொண்டுவரப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை முன்பைவிடப் பல மடங்கு அதிகம் என்றும்
அவற்றை வைப்பதற்குப் போதுமான குளிர்பதன வசதி இல்லை என்றும் ஊழியர் ஒருவர் கூறினார்.

எனினும் இறந்தவர்கள் COVID-19 நோய்த்தொற்றினால்தான் உயிரிழந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

குவாங்ஸோ (Guangzhou) நகரிலுள்ள மற்றொரு மின்சுடலை ஒரு நாளில் 30க்கும் அதிகமான சடலங்கள் எரியூட்டப்படுவதாக AFPஇடம் தெரிவித்தது.

 

 

 

-smc