ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம், 70 ஆண்டுகளில் முதல்முறையாக மியன்மார் தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
அந்நாட்டில் வன்முறை முடிவுக்கு வர அது வற்புறுத்துகிறது. ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi) உட்பட, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு மியன்மாரின் ராணுவ அரசாங்கத்தை அது கேட்டுக்கொண்டுள்ளது.
மியன்மார் நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் நெடுநாளாகவே பிளவுபட்டு இருந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாட்டி ஆங் சான் சூச்சியின் (Aung San Suu Kyi) அரசாங்கத்திடம் இருந்து ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதல் மியன்மாரில் நெருக்கடி தொடர்கிறது.
-smc