ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு எதிரான கடுமையான விதிமுறைகளை மீட்க வேண்டும்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கடுமையான விதிமுறைகளை மீட்டுக்கொள்ளும்படி ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு அங்கு தலிபான் படையினர் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளில் பெண்கள் வேலை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.

அதனால் உலக அளவில் குறைகூறல்கள் எழுந்துள்ளன. பெண்களுக்கான பல்கலைக்கழக, உயர்நிலைக் கல்வியும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் குறிப்பிட்டது. பெண்களின் முழுமையான, சமமான, அர்த்தமுள்ள பங்கேற்புக்கு வழிவிடும்படி அது கேட்டுக்கொண்டது.

பள்ளிகளை மீண்டும் திறக்கவும் விதிக்கப்பட்ட கொள்கைகளையும் வழக்கங்களையும் மாற்றவும் தலிபான் படையிடம் அது கேட்டுக்கொண்டது. பெண்கள் வேலை செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு மன்றம் கண்டனம் விதித்தது.

 

-smc