2023ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரச்சினைகள் தீராது – பிரதமர் ரிஷி சுனக் புத்தாண்டு செய்தி

கொரோனா தொற்றிலிருந்து உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும். ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம் என்றார் பிரதமர் ரிஷி சுனக்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது: 2022-ம் ஆண்டு ஒரு நெருக்கடியான ஆண்டு. கொரோனா தொற்றிலிருந்து இந்த உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும். தற்போதுள்ள நெருக்கடி அனைவரையும் பாதித்துள்ள நிலையில் இதிலிருந்து மக்களை மீட்க பிரிட்டன் அரசு நியாயமான மற்றும் கடினமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த கடினமான முடிவின் காரணமாகதான் எரிபொருளின் விலை அதிகரித்தது. ஆனாலும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். அடுத்த 12 மாதங்களிலும் இங்கிலாந்தின் பிரச்சினை தீர்வுக்கு வராது. 2023-ம் ஆண்டும் இங்கிலாந்து மக்களுக்கு நெருக்கடியான ஆண்டாகதான் இருக்கும். இந்த நெருக்கடியான 12 மாதங்களைக் கடந்த பின் இங்கிலாந்து மிகச் சிறந்ததாக இருக்கும். ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம். அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சார்லஸ் மன்னரின் முடிசூட்டுவிழா இங்கிலாந்தை மீண்டும் ஒன்றிணைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

 

-mm