அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மீண்டும் பனிப்புயல் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் கேவின் நியூசம் மாநிலத்தில் அவசரநிலையைப் பிறப்பித்திருக்கிறார். பசிபிக் பெருங்கடலில் இருந்து மாபெரும் வானிலை மாற்றம் உருவாகவிருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அது கடந்துவரும் திசையில் வசிப்போர் தங்கள் இடங்களிலிருந்து வெளியேறத் தயாராய் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்தனர். அண்மைக்காலமாக அமெரிக்காவின் மேற்கே உள்ள மாநிலங்கள் தொடர்ந்து கடுமையான பனிப்புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னெப்போதும் இல்லாத அளவு கனத்த மழை பெய்திருக்கிறது. பல இடங்களில் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி அவதிப்பட்டனர்.
-smc