அனைத்துலகப் பணநிதியம் விதிக்கும் கடன் விதிமுறைகளுக்குப் பாகிஸ்தான் கட்டுப்படும்

அனைத்துலகப் பணநிதியம் விதிக்கும் கடன் விதிமுறைகளுக்குப் பாகிஸ்தானிய அரசாங்கம் முழுமையாகக் கட்டுப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) கூறியிருக்கிறார்.

பணநிதியம் பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அவசரகாலக் கடனைக் கொடுக்கவிருக்கிறது. அதன் தொடர்பில் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் பணநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன் (Kristalina Georgieva) தொலைபேசியில் உரையாடினார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தால் நாட்டின் பொருளியல் மோசமானது. அதனால் அதன் மாதந்திர ஏற்றுமதிகளுக்குப் பணம் செலுத்துவதற்குக்கூட போதுமான நிதி பாகிஸ்தானிடம் இல்லை.

 

 

 

-smc