பண அரசியல் அம்னோவைக் கொல்லும் முன் நாம் பண அரசியலை அழிக்க வேண்டும் – தோக் மாட்

15வது பொதுத் தேர்தலில்  கட்சியின் மோசமான செயல்பாட்டிற்காகக் குற்றம் சாட்டி, பண அரசியலின் நடைமுறையை அழிக்க  கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசன்.

இங்கே கட்சியின் பொதுச் சபையில் பெண்கள், பெமுடா மற்றும் புத்ரி காங்கிரஸின் தொடக்கத்தில் பிரதிநிதிகளிடம் அவர் ஆற்றிய உரையில், அம்னோவை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டு வந்ததற்கு பண அரசியலே காரணம் என்று தோக் மாட் என்று பிரபலமாக அறியப்பட்ட முகமட் ஹாசன் குற்றம் சாட்டினார்.

இது அம்னோவை GE15ல் தோற்கடித்தது மட்டுமல்லாமல், நம்முடைய கட்சியை பலவீனமாகவும், வலிமை குறைந்ததாகவும் ஆக்கியுள்ளது, என்று அவர் கூறினார்.

“நமது மதம், நமது பழக்கவழக்கங்கள் மற்றும் நமது நடைமுறைகளுக்கும் மற்றும் அனைத்து அம்னோ உறுப்பினர்களுக்கும் பண அரசியல் அசிங்கமானது, அருவருப்பானது மற்றும் கேவலமானது. அம்னோ தூய்மையாக இருப்பவர்களுக்கு மட்டுமே, மற்றும் தங்கள் தேசத்தை நேசிப்பவர்களுக்கு மட்டுமே. பண அரசியல் அம்னோவைக் கொல்லும் முன் நாம் பண அரசியலைக் கொல்ல வேண்டும்.” என்றார்.

நவம்பர் 19 வாக்கெடுப்பில் அம்னோ 26 இடங்களை வென்றது, MCA இரண்டையும், MIC மற்றும் PBRS தலா ஒரு இடத்தையும் பெற்றன.

பிஎன் 30 இடங்களைப் பெற்றதே அதன் மிக மோசமான தேர்தல் செயல்திறன் ஆகும். இதனை ஒப்பிடுகையில், பக்காத்தான் ஹராப்பான் 82 இடங்களையும், பெரிகாத்தான் நேஷனல் 74 இடங்களையும் கைப்பற்றியது.

மலேசியாவின் டிஎன்ஏ மிதமானது

மலேசியாவை மிதமான பாதைக்கு திரும்பச் செய்ய வேண்டியது  அவசியம், இதில் ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதில் அம்னோவின் முக்கியப்பங்கு உள்ளது என்றார்.

இனம் மற்றும் மதம் சார்ந்த பிரச்சனைகள் எப்படி சில அரசியல் கட்சிகளால் உச்சகட்டமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை பார்க்கும் போது, மலேசியா நடுநிலைமைக்கு திரும்ப வேண்டும், என்று அவர் கூறினார்.

மலேசியாவின் எதிர்காலத்தை வலதுசாரிகள் அல்லது இடதுசாரிகளால் வடிவமைக்க நாம் அனுமதிக்க முடியாது, என்னெண்டால் மலேசியாவின் டிஎன்ஏ மிதமானது, என்று அவர் கூறினார்.

-FMT