உலகப் பொருளியல் மெதுவடையும் சூழலில் கூடுதல் ஊழியர்கள் குறைந்த வருமான வேலைகளில் சேர நேரிடலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகில் விலைவாசி, மக்களின் வருமானத்தைவிட வேகமாக உயர்ந்து வரும் வேளையில் கூடுதலானோர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவதை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக ஊழியர் அமைப்பு சுட்டியது.
இதற்கிடையே, உலகில் வேலையின்மை விகிதம் அதிகரிக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
குறைவான வளர்ச்சி, அதிகரிக்கும் விலைவாசி – ஒரே நேரத்தில் இரண்டுமே நிகழும் நிலை stagflation – மிதமிஞ்சிய பணவீக்கம் என்றழைக்கப்படுகிறது.
1970களுக்குப் பிறகு முதல்முறையாக மிதமிஞ்சிய பணவீக்கம் ஏற்படும் சூழல் நிலவுவதாக அமைப்பு அதன் வருடாந்திர உலக வேலைவாய்ப்பு, சமூக நிலவர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
-smc