பாலஸ்தீனத்தில் ஆசிரியர், போராளி சுட்டுக்கொலை: இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை

பாலஸ்தீன போராளிகளுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையேயான மோதல் பல்லாண்டு காலமாக தொடர்கதையாக நீண்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் ஜாவத் பாவாக்னா வயது 57 என்ற ஆசிரியரும், ஆதம் ஜபாரின் (28) என்ற பாலஸ்தீனிய போராளியும் இஸ்ரேல் படையினரால் நேற்று அதிகாலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பற்றி இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், “ஜெனின் அகதிகள் முகாமில் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

படையினரும் திருப்பிச்சுட்டனர்” என தெரிவித்தது. ஜெனினில் இயங்கி வந்த போராளிகள் முகாமை சேர்ந்த அதிகாரி ஒருவரை இஸ்ரேல் படையினர் கைது செய்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மேற்கு கரை பகுதியிலும், கிழக்கு ஜெருசலேமிலும் 150 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆனால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் போராளிகள் என்று இஸ்ரேல் கூறுகிறது.

 

-dt