அமெரிக்காவின் கடன் உச்சவரம்பைத் தாண்டிவிட்டது

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே அரசியல் போட்டி வலுவடைந்து வருகிறது.

அமெரிக்கா கடன் உச்சவரம்பைத் தாண்டிவிட்டது அதற்குக் காரணம். அமெரிக்கா அதன் கடமைகளைத் தவறவிடாமல் இருப்பதற்குத் தனித்துவமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிதியமைச்சர் ஜெனட் யெல்லன் கூறினார். ஆனால் காலம் கடந்து கொண்டிருக்கிறது.

நிதியமைச்சு அதன் செலவினங்களைச் செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட தொகை அதன் கடன் உச்சவரம்பு. தற்போது அந்தத் தொகை 31 டிரில்லியன் டாலருக்கும் அதிகம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட முறை கடன் உச்ச வரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்தாமல் இருப்பது அமெரிக்காவுக்கும் உலகுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும்.

வரும் மாதங்களில் கடன் உச்ச வரம்பு உயர்த்தப்படாவிட்டால் அல்லது தற்காலிகமாக ரத்துச் செய்யப்படாவிட்டால் அமெரிக்காவின் பொருளியல் வளர்ச்சி சுமார் 5 விழுக்காடு குறையலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அத்தகைய சூழல் அமெரிக்காவில் பொருளியல் மந்தநிலைக்கு இட்டுச் செல்லலாம், உலக நிதி நிலைத்தன்மைக்கும் அது அச்சுறுத்தலாக அமையக்கூடும்.

 

 

-smc