பெருவின் பிரபல சுற்றுலாத் தலமான மச்சு பிச்சு மூடப்பட்டது

பெருவில் நடைபெறும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் நாட்டின் பிரபல மச்சு பிச்சு சுற்றுலாத் தலம் மூடப்பட்டுள்ளது.

வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாட்டின் கலாசார அமைச்சு கூறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் தடங்களைச் சேதம் செய்ததால் மச்சு பிச்சு சுற்றுலாத் தலத்திற்கு இட்டுச்சென்ற சேவைகள் முன்னதாக மூடப்பட்டிருந்தன.

வெளிநாட்டினர் 300 பேர் உட்பட மொத்தம் 400 பேர் மச்சு பிச்சுவில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட காத்திருக்கின்றனர்.

பெருவின் பொருளியலில் சுற்றுப்பயணம் 3 முதல் 4 விழுக்காடு வரை அங்கம் வகிக்கிறது. பேரணிகள் எப்போது முடிவடையும் என்பது தெரியாத நிலையில் பெருவின் சுற்றுப்பயணத்துறை பாதிப்படைய ஆரம்பித்துள்ளது.

 

 

-smc