இத்தாலியில் தொடர் நிலநடுக்கத்தால் பள்ளிகள், அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன

இத்தாலியின் பிரபலச் சுற்றுலாத் தலமான டஸ்கனில் தொடர் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதையடுத்து சியெனா நகரிலுள்ள அருங்காட்சியகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழங்கள் முதலியவை உடனடியாக மூடப்பட்டன.

அந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.5ஆகப் பதிவானது. உயிருடற்சேதம் குறித்த உடனடித் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

நள்ளிரவு தொடங்கி சுமார் 20 சிறிய அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டன. அதனைத் தொடர்ந்து மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இத்தாலியும் ஒன்று. அங்கு 2009, 2016ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரிடர்களில் சுமார் 600 பேர் மாண்டனர்.

 

-sm