அண்டார்ட்டிக்கா பெருங்கடலில் இதுவரை இல்லாத அளவு உருகியுள்ள பனிப்படலம்

அண்டார்ட்டிக்கா பெருங்கடல் மேற்பரப்பில் உள்ள பனிப்படலம் இதுவரை இல்லாத அளவில் உருகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பனிப்படலத்தின் பரப்பளவு இவ்வாரம் 1.91 மில்லியன் சதுர கிலோமீட்டராகப் பதிவானதாக அமெரிக்காவின் தேசிய பனி, ஐஸ் தரவு நிலையம் கூறியது. 1979ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியது முதல் இதுவே ஆகக் குறைந்த அளவு.

பனிப்படலத்தின் பரப்பளவு கவலைக்குரிய அளவிற்குச் சுருங்கியிருப்பதாகக் கடந்த ஆண்டே தகவல் வெளிவந்தது. தற்போது நிலைமை மோசமாகியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் பனிப்படலம் மேலும் உருகலாம் என்று நிலையம் முன்னுரைத்துள்ளது.

பனிப்படலம் ஏற்கெனவே கடலில் உள்ளதால் அது உருகினாலும் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

 

 

-sm