பெர்சத்து கணக்குகள் விசாரணையில் முகிடின் வாக்குமூலத்தை MACC பதிவு செய்தது

முடக்கப்பட்டுள்ள பெர்சத்துவின் வங்கிக் கணக்குகள்மீதான விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதமர் முகிடின்யாசினின்(Muhyiddin Yassin) வாக்குமூலத்தை MACC பதிவு செய்துள்ளது.

விசாரணையின் மூலம், விசாரணை அறிக்கைமேல் நடவடிக்கைக்காக அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸிடம் (Attorney-General’s Chambers) ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு விசாரணையை முடிக்கும் இறுதி கட்டத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிக்கைகளின்படி, முகிடின் (மேலே) நேற்று காலை முதல் நண்பகல் வரை புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

“விசாரணை ஆவணங்கள் முடிவடைந்துவிட்டன, இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள்மீது குற்றம் சாட்டலாமா வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்”.

“இரண்டு வங்கிக் கணக்குகளும் (பெர்சத்துவுக்குச் சொந்தமானவை) இன்னும் முடக்கப்பட்டுள்ளன,” என்று அவர்கள் கூறினர்.

முகிடினைத் தவிர, வேறுபல மூத்த பெர்சத்து தலைவர்களும் MACC ஆல் முன்னர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

பணமோசடி தடுப்பு மற்றும் சட்டவிரோத நிதியுதவிச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை எளிதாக்குவதற்காகப் பெர்சத்துவின் இரண்டு வங்கிக் கணக்குகளை MACC முடக்கியுள்ளதாக இம்மாதத் தொடக்கத்தில் மலேசியாகினி தெரிவித்தது. இரண்டு கணக்குகளிலும் சுமார் 40 மில்லியன் ரிங்கிட் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கட்சி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தபோது பல்வேறு திட்டங்களைப் பெற்ற சுமார் 10 ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெர்சத்து சுமார் 300 மில்லியன் ரிங்கிட் நன்கொடைகளைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கணக்கு முடக்கப்பட்டதாக MACC வட்டாரம் கூறியது.

பெர்சத்து தலைவராக இருக்கும் முகிடின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, கட்சியின் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதால் கணக்குகளைச் செயல்படுத்துமாறு கோரி MACC க்கு ஒரு கடிதம் எழுதப்போவதாகக் கூறினார்.