சீனா தனது செல்வாக்கை மேம்படுத்த வளரும் நாடுகளின் பாதுகாப்பு பணியாளர்களுக்கு பயிற்சி

இலங்கை உட்பட்ட வளரும் நாடுகளை சேர்ந்த சுமார் 5000 பாதுகாப்பு பணியாளர்களுக்கு சீனா பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் சவுத் மோர்னிங்கில் வெளியிடப்பட்டுள்ள பீய்ஜிங்கின் உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சியின் ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சீனா தனது உலகளாவிய செல்வாக்கை மேம்படுத்த குறைந்தது அடுத்த 5 ஆண்டுகளில் வளரும் நாடுகளை சேர்ந்த 5000 பாதுகாப்பு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது என்று குறித்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பயிற்சி திட்டம்

தனது புவிசார் அரசியல் போட்டியாளரான அமெரிக்காவுடன், முக்கிய பிராந்தியங்களில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மத்திய கிழக்கு, பசிபிக் தீவுகள் மற்றும் மத்திய ஆசியா போன்ற பிராந்தியங்களில் அதன் பலதரப்பு மற்றும் இருதரப்பு பாதுகாப்பு பயிற்சி திட்டங்களை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சீனா பயிற்சி அளித்து வந்தது.

இந்த நிலையில் அடுத்து ஐந்து ஆண்டுகளில் இலங்கை, பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம் மற்றும் துருக்கி ஆகிய ஆறு நாடுகளின் பொலிஸாருக்கு பயிற்சியளிக்க சீன திட்டம் வகுத்துள்ளதாக சீனாவின் செய்தித்தாளொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

-tw