சீனாவின் நற்பெயரைப் பிரிட்டன் கெடுக்கிறது – பெய்ச்சிங் குற்றச்சாட்டு

பிரிட்டனின் புதிய தற்காப்பு, வெளிநாட்டுக் கொள்கை அறிக்கையைச் சீனா சாடியுள்ளது.

தனது நற்பெயரைப் பிரிட்டன் கெடுப்பதாக அது குற்றஞ்சாட்டியது. அனைத்துலக ஒழுங்கிற்குப் பெய்ச்சிங் சவால் விடுப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. பெய்ச்சிங் வாய்ப்பு வழங்குகிறதே தவிர சவால் விடுக்கவில்லை என்று பிரிட்டனில் உள்ள சீனத் தூதரகம் கூறியது.

உலக அளவில் சீனாவின் ஆதிக்கத்தால் எழும் பிரச்சினைகளைக் கையாள்வதே புதிய அறிக்கையின் நோக்கம் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிலெவர்லி தெரிவித்தார்.

உலகின் புதிய மையப் பகுதி இந்தோ-பசிபிக் வட்டாரம் என்று குறிப்பிட்ட திரு. கிலெவர்லி கூடுதலான அமைதியையும் நிலைத்தன்மையையும் காண பிரிட்டன் பெய்ச்சிங்குடன் செயல்பட விரும்புவதாகச் சொன்னார்.

 

 

-sm