கதிரியக்க சுனாமி உருவாக்கக் கூடிய கப்பலை நீருக்கடியில் சோதனை செய்த வடகொரியா

கதிரியக்க சுனாமியை உருவாக்கக் கூடிய தாக்குதல்களை வடகொரியா முன்னெடுத்துள்ளது.

இதன்படி ஆளில்லா விமானம் ஒன்றை வடகொரியா நீருக்கடியில் சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது. தெற்கு ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள ரிவோன் கவுண்டி கடற்கரையில் இந்த வாரம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

80 முதல் 150 மீற்றர் ஆழத்தில் 59 மணி நேரமாக பணயம் செய்த ஆளில்லா விமானம் நீருக்கடியில் அமைக்கப்பட்டிருந்த ஹெய்ல் என்ற கப்பலை வெடிக்கசெய்துள்ளது. கதிரியக்க அலையை உருவாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள இந்த சோதனை கப்பல் எதிரி படைகள் மற்றும் துறைமுகங்களில் பதுங்கிச் செல்லும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்குலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

-if