வட ஆபிரிக்காவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறும் நிலை

துனிசியாவிற்கு பொருளாதார உதவி விரைவில் வழங்கப்படாவிட்டால், வட ஆபிரிக்காவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறும் நிலையொன்று உருவாகும் என  இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி தெரிவித்துள்ளார்.

துனிசியாவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இடையிலான பிணையெடுப்பு பேச்சுக்கள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுடன், பணத்தை விடுவிக்க ஜனாதிபதி கைஸ் சையிடமிருந்து தொலைநோக்கு சீர்திருத்தங்களைக் சர்வதேச நாணய நிதியம் கோருகிறது.

இந்நிலையில் துனிசியாவிற்கு அவசரமாக உதவி தேவைப்படுகிறது. எங்களால் நேரத்தை வீணடிக்க முடியாது என்று தஜானி தெரிவித்துள்ளார்.

2023 இல் இதுவரை இத்தாலிக்கு 20,000  பேர் குடியேறியுள்ளனர். 2016 ஆம் ஆண்டில் 181,436 பேர் பெரும்பாலும்  படகுகளில் நாட்டிற்கு வந்தடைந்ததாகவும்,  பெரும்பாலானவர்கள் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து வட ஆபிரிக்கா வழியாக வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

-if