அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் தவிர பள்ளி ஊழியர்கள் 3 பேரும் உயிரிழந்ததை நாஷ்வில் நகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் டீனேஜ் பெண் என்று சந்தேகிப்பதாகவும், அவர் இரண்டு துப்பாக்கிகள் மூலம் சுட்டிருக்கலாம் என்றும் நாஷ்வில் நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்சமயம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பல குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

 

 

-th