அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குதலில் சிக்கி 18 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் தெற்கில் வீசிய சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குதலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் மத்திய மேற்கு, தெற்குப்பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

குறைந்தது ஏழு மாநிலங்களில் வீசிய சக்திவாய்ந்த சூறாவளியில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறந்தவர்களில் டென்னசி கவுண்டியில் ஏழு பேரும், ஆர்கன்சாஸின் வைன் என்ற சிறிய நகரத்தில் நான்கு பேரும், இந்தியானாவின் சல்லிவனில் மூன்று பேரும் அடங்குவர். மேலும் வெள்ளி இரவு முதல் சனிக்கிழமை வரை தாக்கிய புயல்களில் இருந்து மற்ற இறப்புகள் அலபாமா, இல்லினாய்ஸ் மற்றும் மிசிசிப்பி ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளன.

மேலும் ஆர்கன்சாஸின் லிட்டில் ராக் அருகே 2,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சூறாவளியில் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாகாண மேயர் கூறினார். இதனிடையே 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்சார வசதி இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி நகரில் வலிமையான சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்த ஒரு வாரத்தில் மற்றொரு சூறாவளி தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இதன் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

 

-dt