3 ஆண்டுகளுக்குள் 12,800 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாவர் – அன்வார்

3 ஆண்டுகளுக்குள் 12,800 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாவர் என்று அன்வர் கூறினார்

கிட்டத்தட்ட 4,300 பேருக்கு இந்த ஆண்டு மட்டும் 1.7 பில்லியன் ரிங்கிட் செலவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், சுகாதார அமைச்சகம் படிப்பை முடித்த மருத்துவ மாணவர்களின் தங்களின் பயிற்சியை மேற்கொள்ள ஒப்பந்த மருத்துவர்கள் நியமனம் தொடரும்என்றார்.

அடுத்த மூன்றாண்டுகளுக்குள் 12,800 ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தரப் பணிகளில் ஈடுபடுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் 1.7 பில்லியன் ரிங்கிட் செலவில் கிட்டத்தட்ட 4,300 ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அன்வார் இன்று மக்களவையில்  தெரிவித்தார்.

“அவர்கள் நிரந்தர பதவிகளில் உள்வாங்கப்பட்டாலும், சுகாதார அமைச்சகம் பயிற்சிகால வேலைக்காக ஒப்பந்த மருத்துவர்களை நியமிப்பதைத் தொடரும், இது ஒவ்வொரு ஆண்டும் அமைச்சகத்தின் ஊதியத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

ஒப்பந்த மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன என்பதை உணர்ந்ததாகக் கூறிய அன்வார், அவற்றைக் கட்டம் கட்டமாகத் தீர்க்க வழிமுறைகளை அரசாங்கம் தேடி வருவதாகக் கூறினார்.