உக்ரேன் விவகாரத்தில் சீனா சமரசம் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை – ரஷ்யா

உக்ரேன் விவகாரத்தில் சீனா சமரசம் செய்வதில் ரஷ்யாவுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் விவகாரத்தில் போருடன் தொடர்வதே முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரே வழி என்று ரஷ்யா அரசாங்கம் வலியுறுத்தியது.

சீன அதிபர் சி சின்பிங்குடன் பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்கினும் பேசியதைத் தொடர்ந்து ரஷ்ய அரசாங்கப் பேச்சாளர் அந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

தரப்புகள் சமரசம் அடைய செய்வதற்கு சீனாவிடம் செயல்திறன்மிக்க, அதிகாரமிக்க ஆற்றல் இருக்கலாம் என்றாலும் விவகாரம் சிக்கலானது என டிமிட்ரி பெஸ்கோவ் சொன்னார். ஆகவே இந்த நேரத்தில் அரசியல் தீர்வுக்கான சாத்தியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

உக்ரேனில் மீண்டும் அமைதியைக் கொண்டுவர, பெய்ச்சிங் அமைதித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறது. ஆனால் அந்தத் திட்டம் உறுதியாக வெளியிடப்படவில்லை. பெலரூஸில் உத்திபூர்வ அணுவாயுதங்களை வைப்பதற்கு எடுத்த முடிவை ரஷ்ய அரசாங்கம் தற்காத்துப் பேசியிருக்கிறது.

நேட்டோ கூட்டணி விரிவுபடுத்தப்பட்டதற்கு அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாய் அது சொன்னது.

 

-sm