உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரின்போது உக்ரைனில் இருந்து19,544 குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர் எனவும் ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
ரீயூனைட் உக்ரைன்
இதனை மறுத்த ரஷ்யா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், போரில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்ப்பதற்காக `ரீயூனைட் உக்ரைன்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
போரால் பிரிந்த குடும்பங்கள்
அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைக்க உதவிகரமாக இருக்கும் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோதலின் போது பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைக்க உதவும் “ரீயூனைட் உக்ரைன்” என்ற செயலியை உருவாக்க உக்ரைன் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Find My Parent உடன் இணைந்துள்ளது என்று தேசிய காவல்துறையின் துணைத் தலைவர் Oleksander Fatsevych தெரிவித்துள்ளார்.
“குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பதற்கான கருவிகளில் இதுவும் ஒன்று” என்று அவர் ஒரு இணையவழி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
-tw