ரம்ஜான் கொண்டாட்டங்களில் பெண்கள் பங்கேற்க ஆப்கனிஸ்தானில் தடை

ஆப்கனிஸ்தானில் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கனிஸ்தான் சென்ற பிறகு, அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில், கடந்த முறையைப் போல இம்முறை தங்களின் ஆட்சி முறை இருக்காது என உறுதி அளித்த தலிபான்கள், பிறகு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினார்கள்.

ஆறாம் வகுப்புக்கு மேல் சிறுமிகள் பள்ளிகளுக்குச் செல்ல தடை, கல்வி நிலையங்களில் பெண்கள் பணியாற்ற தடை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை, பொது இடங்களுக்குச் செல்வதில் கட்டுப்படு என பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கனிஸ்தானின் பக்லான், தக்கார் எனும் இரண்டு மாகாணங்களில் பெண்கள் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்களும் பெண்களும் ஒன்றாக கூடுவார்கள் என்பதாலும், பெண்கள் முக்காடு போடாமல் இருப்பார்கள் என்பதாலுமே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

-th