சூடான் போராளிகள் ஆய்வகத்தை ஆக்கிரமித்துள்ளதால் பெரிய உயிரியல் ஆபத்து ஏற்படலாம்

சூடானில் கொடிய நோய்க்கிருமிகளைக் கொண்ட உயிரியல் ஆய்வுக்கூடம் துணை ராணுவப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.

உயிரியல் ஆய்வகம் சிக்கலில் உள்ளது

இந்த மாத தொடக்கத்தில் சூடானில் சண்டை வெடித்த பிறகு, தொழில்நுட்ப வல்லுநர்களால் ஆய்வகத்தைப் பாதுகாக்க முடியவில்லை, மேலும் போலியோ, காலரா மற்றும் தட்டம்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் கிருமிகளைப் படிக்கும் உயிரியல் ஆய்வகம் சிக்கலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிலைமை மிகவும் நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் சூடான் பிரதிநிதி டாக்டர் நிமா சயீத் அபித் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 15 அன்று சூடான் படைகளுக்கும் இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்ததில் இருந்து குறைந்தது 427 பேர் இறந்துள்ளனர் மற்றும் 3,700 பேர் காயமடைந்துள்ளனர்.

தற்போது 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. சூடானில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 15ஆம் திகதி முதல் நாடு முழுவதும் சுகாதார நிலையங்கள் மீது 14 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பற்றாக்குறை காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

 

-ip