உக்ரேனின் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைக்கக்கூடாது – ரஷ்யாவிற்கு ஐக்கிய நாட்டு நிறுவனம் கண்டனம்

ரஷ்யா உக்ரேன்மீது நடத்திய ஆகாயவழித் தாக்குதலுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

பொதுமக்களும் குடியிருப்புப் பகுதிகளும் எப்போதும் குறிவைக்கப்படக்கூடாது என்று அது குறிப்பிட்டது. ரஷ்யாவின் அண்மையத் தாக்குதலால் குறைந்தது 23 பேர் மாண்டுவிட்டனர். அதில் 4 பிள்ளைகள் அடங்குவர். பலி எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட 23 ஏவுகணைகளில் 21ஐச் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் கூறுகிறது. உக்ரேனின் ஆகாயத் தாக்குதல் அமைப்பை வலுப்படுத்த மேற்கத்திய நாடுகள் வழங்கிய போர்க் கருவிகள் உதவியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடுமையான தாக்குதல்களை முறியடிக்க இன்னும் கூடுதலாக ஆயுதங்கள் தேவை என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

 

 

-sm