தாய்லந்தில் மீண்டும் கோவிட்-19 நோய்ப்பரவல் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அங்கு கொண்டாடப்பட்ட புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருகிறது. இந்த வாரம் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் பிராயுத் சான் ஓச்சா, சுற்றுலா தலங்களை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மூத்தோரும் எளிதில் பாதிக்கப்படக்கூடியோரும் booster தடுப்புமருந்தை எடுத்துக்கொள்ளும்படி தாய்லந்துச் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ள அமைச்சு பரிந்துரைக்கிறது. தாய்லந்தில் அடுத்த மாதம் மழைக்காலம் தொடங்கும்போது, நோய்ப்பரவல் சூழல் கடுமையாகலாம் என்று அஞ்சப்படுகிறது.
-sm