சுடானில் தொடரும் வன்முறையால் பொதுமக்களின் பாதுகாப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாய் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்;
இன்னும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 700,000க்கும் மேற்பட்டோர் தற்போது வீடின்றித் தவிக்கின்றனர்.
ராணுவப் படைகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பூசலிலிருந்து விடுபட இன்னும் கூடுதலானோர் எல்லைகளைக் கடக்கின்றனர்.
சுடானிலிருந்து சுமார் 150,000 பேர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர்.
போர் வட்டாரங்களில் சிக்கியிருப்போர் குடிநீர், மின்சாரம், உணவு, மருத்துவச் சேவை ஆகியவற்றில் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
போர் தொடங்குவதற்கு முன்னதாக, ஏற்கனவே மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மனிதாபிமான உதவி தேவைப்பட்டது.
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டது.
இன்னும் கூடுதலான நிவாரண உதவி தேவைப்படுவதாக அது குறிப்பிட்டது.
-sm