வடக்கு இத்தாலியில் கனமழை, வெள்ளத்தால் 9 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் பெய்த கனமழையால், கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளால் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

பல ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என்றும்,, நகரங்கள் வழியாக வெள்ளம் பாய்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளது என்றும் பாதுகாப்பு மந்திரி தெரிவித்தார்.

மழையால் ஏற்பட்ட வெள்ளம் 37 நகரங்களை தாக்கியதாகவும், சுமார் 120 நிலச்சரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

-dt