உக்ரைன் மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

உக்ரைனில் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி – 30 பேர் காயம்.

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டினிப்ரோ நகரத்தில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோவை பகிர்ந்துள்ளார்.

“ஒரு தீய அரசு மட்டுமே மருத்துவமனைக்கு எதிராக போராட முடியும். இதில் ராணுவ நோக்கம் இருக்க முடியாது. இது சுத்தமான பயங்கரவாதம். ரஷ்யா தனது சொந்த விருப்பத்தில் தீமையின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் அது இந்த பாதையை கைவிடாது. பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்”.

என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-dt