நைஜீரியாவின் புதிய அதிபராக போலா தினுபு பதவியேற்பு

நைஜீரியா நாட்டின் புதிய அதிபராக போலா தினுபு இன்று பதவியேற்று கொண்டார்.

நைஜீரியா நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்பட்ட சூழலில், அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளால் தேர்தலுக்கு சட்டப்பூர்வ சவால் எழுந்த நிலையில், அந்நாட்டின் புதிய அதிபராக போலா தினுபு இன்று பதவியேற்று கொண்டார்.

இதனால், அவர் நைஜீரியாவின் 16-வது அதிபராகியுள்ளார். இதற்காக தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் 5 ஆயிரம் பேர் அமர கூடிய இடத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.

பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் ககாமே, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா போன்றோரும் கலந்து கொண்டனர்.

அழைப்பிதழ்கள் இல்லாத நாட்டு மக்கள் நிகழ்ச்சியை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டது- இதனை முன்னிட்டு தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் 3 நாள் சுற்றப்பயணத்தின் ஒரு பகுதியாக நைஜீரியாவுக்கு சென்று உள்ளார். நைஜீரியா நாட்டுக்கான இந்திய பாதுகாப்பு துறை மந்திரியின் முதல் பயணமும் இதுவாகும்.

 

-dt