சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திடீர் நிலச்சரிவு: 14 பேர் பலி – 5 பேர் மாயம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகி உள்ளனர்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகிலுள்ள ஜின்கோஹேவில் அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் காலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 5 பேர் மாயமாகி உள்ளனர்.

தற்போது, அவர்களை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ (150 மைல்) தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும். தொலைதூர மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த இப்பகுதி, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

-dt