பிலிப்பைன்சில் மேயோன் எரிமலை வெடிக்கும் அபாயம் – விமானங்கள் பறக்க தடை

பிலிப்பைன்சில் மேயோன் எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி எரிமலை சீற்றம் காரணமாக கடும் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் பிலிப்பைன்சின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் லூசன் தீவில் பல ஆய்வுகளை மேற்கொண்டது.

இதில் பிரபல சுற்றுலா தலமான மேயோன் நகரில் உள்ள எரிமலைக்கான எச்சரிக்கையை இரண்டாவது நிலைக்கு உயர்த்தியது. இது கடந்த 400 ஆண்டுகளில் 50 முறைக்கும் மேல் வெடித்துள்ள ஒரு எரிமலை ஆகும்.

இதனால் அங்கு மலைச்சரிவுகள் மற்றும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மேயோன் எரிமலையில் இருந்து 6 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த எரிமலையின் உச்சிக்கு அருகில் விமானங்கள் பறக்க வேண்டாம் என விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளது.

 

-dt