கனடா காட்டுத்தீயால் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்

கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது.

மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்தது. இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தகவல்.

காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக கனடாவில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்திருக்கிறது.

இதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டதோடு, விமானங்கள் காலதாமதமாக கிளம்பி சென்றன. மேலும் விளையாட்டு நிகழ்வுகள் தாமதமாக துவங்கப்பட்டன. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டா வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

கனடாவில் இந்த காட்டுத்தீ காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயில் சுமார் 3.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு முழுக்க தீயில் கருகின. கனடா வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீ இது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

1960-க்களில் இருந்து இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என நியூயார்க் நகர சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தெரிவித்துள்ளார். இந்த நிலை, பல நாட்கள் வரை நீடிக்கும் என்றும், இது அவசரகால நெருக்கடி என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சூல் தெரிவித்தார்.

 

-mm