தாய்லந்தின் புக்கெட்டில் பரவும் மர்ம நோய்

தாய்லந்தின் புக்கெட் நகரின் 3 வட்டாரங்களில் அடையாளம் தெரியாத கிருமியால் 100 பேர் நோய்வாய்ப்பட்டதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கிருமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.

கிருமித்தொற்றை ஆராயவும் நிலைமையைச் சமாளிக்கவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு அவசர நடவடிக்கை நிலையத்தைத் திறந்துள்ளது.

வயிற்றுப்போக்கால் மரணங்கள் ஏற்படுவது குறைவு என்றாலும் அது சுகாதார நெருக்கடியாக மாறுவதைத் தவிர்க்க விதிமுறைகள் செயல்படுத்தப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்ற வியாழக்கிழமை ஜூன் 8 ஆம் தேதி நிறையப் பேருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தது.

மருத்துவ உதவி நாடிய நோயாளிகள் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி, லேசான காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் இருந்தன.

பல பள்ளிகளில் மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

-sm