சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது.

சிரியாவில் 2011-ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்தே அதன் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடந்து வருகிறது. இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

அந்த நகரை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. இதுகுறித்து சிரியா ராணுவ வட்டாரம் கூறும்போது, இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம், சிரியா தலைநகர் டமாஸ்கர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கோவன் குன்றுகளில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் சிலவற்றை சிரியாவின் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது.

 

-mm