ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி , நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே ரஷ்யாவின் புதிய தூதரகத்தை அமைக்கும் கட்டுமானப் பணிகள் தடைசெய்யப்படும் என்று கூறியுள்ளார்.
தேசியப் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலை விளைவிக்கக்கூடும் என்ற அக்கறையால் அரசாங்கம் கட்டுமானத்தை நிறுத்துவதாக அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றக் கட்டடம் தலைநகர் கான்பெராவில் உள்ளது.
அதற்குப் பக்கத்தில் உள்ள நிலத் தொகுதி ஒன்றின் குத்தகை தற்போது ரஷ்யா வசம் உள்ளது.
உளவு அமைப்புகளின் ஆலோசனைக்குப் பின்னர் தேசியப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கட்டுமானத்தைத் தடைசெய்யும் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அல்பனீசி கூறினார்.
-sm