ரஷிய தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த உக்ரைன்

மூன்று ஏவுகணைகள் உக்ரைனின் மத்திய கிழக்கில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள தொழில்துறை நிறுவல்களை தாக்கியது.

ஒரு ஆளில்லா விமானம் மட்டும் கிரிமியாவின் மையப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தாக்கியுள்ளது. ரஷியா உக்ரைனுக்கு இடையே கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது.

உக்ரைனும் ரஷியாவின் செயலை தடுக்கும் வகையில் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக ரஷியா முக்கிய உக்ரைன் நகரங்களுக்கு எதிராக தீவிர இரவு நேர தாக்குதலை நடத்தி வருகிறது.

இதை வெற்றிகரமாக உக்ரைன் எதிர் தாக்குதல் மூலம் முறியடித்து வருகிறது. இந்நிலையில், ரஷியா நேற்று இரவு நடத்திய தாக்குதலின்போது உக்ரைன் படை ஒரு ஏவுகணை மற்றும் 20 வெடி பொருட்களை அடங்கிய ஆளில்லா விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

மற்ற மூன்று ஏவுகணைகள் உக்ரைனின் மத்திய கிழக்கில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள தொழில்துறை நிறுவல்களை தாக்கியது. இதற்கிடையே ரஷியாவால் நியமிக்கப்பட்ட கிரிமியா ஆளுநர் கூறுகையில், ” உக்ரைன் தரப்பில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களில் 9 விமானங்களை ரஷிய படைகள் எல்லையில் வீழ்த்தியது” என்றார். இதில், ஒரு ஆளில்லா விமானம் மட்டும் கிரிமியாவின் மையப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தாக்கியுள்ளது. இதில், பல வீடுகளில் ஜன்னல்கள் சேதமடைந்தது.

 

-mm