ஸ்பெயினில் நீடிக்கும் வறட்சியால் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு

ஸ்பெயினில் அதிக நாள் நீடிக்கும் வறட்சியால் பிரபல நீர்நிலை ஒன்றில் உள்ளூர் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு.

புகழ்பெற்ற ஃபுவென்ட்டே டி பியெட்ரா ஈரநிலம் கிட்டத்தட்ட முற்றாக வற்றிப்போய் விட்டது.

அதனால் ஆண்டின் இந்தக் காலக்கட்டத்தில் அங்கு வழக்கமாகக் குடியேறும் flamingo பறவைகளை அதிகம் காணமுடியவில்லை.

ஸ்பெயினின் மலாகா மாநிலத்தில் உள்ள இந்த ஏரியில் குஞ்சு பொரிப்பதற்கென்று பல்லாயிரம் flamingo பறவைகள் திரள்வது வழக்கம்.

ஆனால் இவ்வாண்டு 20, 30 பெரிய பறவைகளை மட்டுமே காணமுடிகிறது.

அங்குப் பெய்துள்ள மழை கிட்டத்தட்ட முப்பதாண்டில் ஆகக்குறைவு என்று அந்த இயற்கைப் பாதுகாப்புப் பகுதியின் காப்பாளர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய கோடைக்காலத்தில் வெப்பநிலை தொடர்ந்து சராசரிக்கும் அதிகமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதனால் வட்டாரத்தில் உள்ள பயணத்துறை சார்ந்த வியாபாரங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

பிளமிங்கோ பறவைகள் குஞ்சு பொரிப்பதற்கு முந்திய இரவு எல்லா மதுக்கூடங்களும் உணவகங்களும் நிரம்பியிருக்கும் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ஆனால் இம்முறை அந்த நிகழ்வு இல்லாததால் நகருக்குப் பெரும் இழப்பு என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

 

-rt