உளவு செயற்கைக்கோள் ஏவுகணை தோல்வியை வடகொரியா கடுமையான தோல்வியாக கருதுகிறது

உளவு செயற்கைக்கோளை ஏவும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது தோல்விக்கான காரணம் குறித்து அதிபர் ஆலோசனை நடத்தினார்.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில பதில் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த மே மாதம், தங்கள் நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை தாங்கிய ராக்கெட் ஒன்றை வட கொரியா செலுத்தியது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த ராக்கெட் செயலிழந்தது. அமெரிக்காவையும், தென்கொரியாவையும் உளவு பார்க்கும் முயற்சியாக செயல்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை தோல்வியடைந்தத்து, வட கொரியாவிற்கு இது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அந்நாட்டதிபரும், சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும் தலைவருமான கிம் ஜாங் உன் இதை மிகப்பெரிய தோல்வி நடவடிக்கையாக உணர்வதாகவும், இதனால் மிகவும் அதிருப்தியிலுள்ளார் எனவும் அங்கிருந்து வரும் செய்தி குறிப்பொன்று தெரிவிக்கிறது.

ராக்கெட் செலுத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக, இதற்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகவும் விமர்சிக்கப்பட்டுள்ளார்கள். தவறுகளுக்கான காரணங்களை கண்டறிந்து, தோல்வியிலிருந்து கற்க வேண்டிய பாடங்களையும் விரைவாக கற்று, மீண்டும் அடுத்த ஒரு ஏவுகணையை செலுத்தியாக வேண்டும் என அவர்கள் நிர்பந்தப்பட்டுள்ளார்கள் என தெரிகிறது.

இருப்பினும் வடகொரியாவின் உளவுத்துறை, ராக்கெட் தோல்விக்கு காரணம் என்னவென்று கண்டறிவதற்கு சில வாரங்களுக்கு மேல் ஆகலாம் என தெரிவித்திருக்கிறது. அடுத்து ராக்கெட் எப்பொழுது விண்ணில் செலுத்தப்படும் என தெரியவில்லை.

வட கொரியாவை கண்காணிக்கும் அமைப்புகள், இந்த தோல்விக்காக, எந்த அதிகாரியும் அல்லது விஞ்ஞானியும் பணி நீக்கமோ அல்லது தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கோ ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றன. அமெரிக்க தலைமையிலான வட கொரிய விரோத வெறுப்பு நடவடிக்கைகளை சமாளிப்பதற்கான எதிர்வினையாக அதிபர் கிம், பல உயர் தொழில்நுட்ப ராணுவ சொத்துக்களை உருவாக்கவும், ஆயுதங்களை சேமித்து வைத்துக் கொள்ள போவதாக உறுதியளித்துள்ளார்.

 

 

-mm