ஆப்கனில் பெண்கள் அழகு நிலையம் நடத்த தடை: தலிபான் ஆட்சியாளர்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்துவதற்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆப்கானிஸ்தானில் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்களும் உடனடியாக தடை செய்யப்படுகிறது. அனைவரும் எங்கள் உத்தரவைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தர்வை மீறுபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெண்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் செவிலியர்களாகவும், மருத்துவர்களாகவும் பணிபுரிய மட்டுமே ஆப்கானிஸ்தானில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

 

-th