உளவு பார்க்கும் திறன் வடகொரியாவின் செயற்கைக்கோளுக்கு இல்லை, ஆராய்ந்த தென்கொரியா தகவல்

வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்தது கடலில் கிடந்த பாகங்களை சேகரித்து தென்கொரியா சோதனை.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து வருகிறது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை.

இறுதியாக கடந்த மே மாதம் செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்கா, தென்கொரியாவின் ராணுவப் பணிகளை உளவு பார்க்க உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைக்கோளை நிலைநிறுத்தினால் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என தென்கொரியா கருதியது.

ஆனால், ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள், வடகொரிய தீபகற்ப கடலில் விழுந்து நொறுங்கியது. இதை மிகப்பெரிய தோல்வியாக வடகொரியா கருதுகிறது. இருந்தாலும் தவறுகளை கண்டறிந்து, சரிசெய்யப்பட்டு மீண்டும் செயற்கைக்கோளை செலுத்த முயற்சி மேற்கொள்வோம் எனத் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே செயற்கைக்கோளின் உடைந்த பாகங்களை தேடும் பணியில் தென்கொரியா ஈடுபட்டது. கப்பற்படை, விமானப்படை, நீரில் மூழ்கி தேடும் வல்லுனர்கள் ஆகியோரை கொண்டு 36 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி செயற்கைக்கொளில் துண்டுகளை சேகரித்தது. அவற்றை ஆராய்ந்த பார்த்தபோது ராணுவ பணிகளை உளவு பார்க்கும் திறனில்லை என தெரியவந்துள்ள என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

எண்ணற்ற மற்றும் முக்கிய பகுதிகளை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். தென்கொரியா மற்றும் அமெரிக்க வல்லுனர்கள் கொண்டு ஆய்வு செய்தபோது வடகொரியாவின் செயற்கைக்கோளுக்கு ராணுவ பணிகளை உளவு பார்க்கம் திறனில்லை என்பது தெரியவந்தது என தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் தகவலுக்கு வடகொரிய இன்னும் பதில் அளிக்கவில்லை.

 

-mm