சீனாவில் கோவிட் தொற்றால் கடந்த மாதம் 239 பேர் பலி

கோவிட் தொற்றுக்கு கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சீனாவில் 239 பேர் பலியானதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோவிட் உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில் மே மாதத்தில் 164 பேரும், ஜூன் மாதத்தில் 239 பேரும் பலியானதாக அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கோவிட் தொற்று பாதித்த நபர் கண்டறியப்பட்டார். இதனையடுத்து 2020 தொடக்கத்தில் சீனா ஜீரோ கோவிட்(“zero-COVID”) திட்டத்தை அமல்படுத்தியது. மிகக்கடுமையான கோவிட் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டங்கள் எனக் கெடுபிடிக்களை விதித்தது.

ஒரே ஒருவருக்கு தொற்று உறுதியானாலும் ஒட்டுமொத்த பகுதிக்குமே கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. கடுமையான ஊரடங்குகள், குவாரன்டைன்கள், கட்டாய கும்பல் பரிசோதனைகள், ஒரு வயது குழந்தைகள் வரை தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துதல், எல்லைகள் மூடல் என அரசு காட்டிய கெடுபிடிகளால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சீனப் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்தது. ஒருகட்டத்தில் மக்கள் சீன அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.

 

 

 

-th